தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திண்டுக்கல்,வேலூர் உள்ளிட்ட 14 மாநக ராட்சிகள் உள்ளன. சென்னையை அடுத்த, திரு வள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட, ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்க கோரிக்கை எழுந்தது. சட்டப்பேரவையில் இதுகுறித்து வேண்டு கோள் விடுக்கப்பட்டது.